
Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்
Deal Score0

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்
1. சின்னப் பரதேசி
மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்.
2. முத்தி அடைந்தோரை
பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே
என்றும் கேளாதே
3. சின்னப் பரதேசி
இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி
தரித்துக்கொள்வேன்
4. என்னை சுத்தமாக
காரும், இயேசுவே
தினம் வழி காட்டும்,
தெய்வ ஆவியே
5. சாந்த இயேசு ஸ்வாமீ ,
உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன்
ஆகப் பார்க்கிறேன்