
Thaayae unthan dharisanam song lyrics – தாயே உந்தன் தரிசனம்

Thaayae unthan dharisanam song lyrics – தாயே உந்தன் தரிசனம்
தாயே உந்தன் தரிசனம் தருவாயே (2)
தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா அண்டி வந்தோம் எங்களுக்கு
அடைக்கலம் நீ அம்மா
அம்மா மரியே எம்மை
அரவணைப்பாய் நீயே
தாயே உந்தன் தரிசனம் தருவாயே(2)
காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ
தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ (2)
இறைவன் கண்டெடுத்த காவியம் நீ (2)
இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ (2)
மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க…
தாயே உந்தன் தரிசனம் தருவாயே…
பாரெல்லாம் உம் பெருமை பாடுதம்மா
உள்ளமெல்லாம் உன்னை நினைந்து மகிழுதம்மா (2)
துயரில் உறுதுணை நீயம்மா (2)
தாயென வந்தோம் அருள் தாருமம்மா(2)
மரியே வாழ்க மரியே வாழ்க
மரியே நீ வாழ்க…
தாயே உந்தன் தரிசனம் தருவாயே