
Thammandai Vantha Paalarai – தம்மண்டை வந்த பாலரை
Deal Score0

1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.
2. குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக் காருணியமுள்ளவர்.
3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.