Skip to content

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே

1.தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம்
மண்டல மானிடர் மாண்பை நாடித் தேடுவோம்

2.ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்
வேண்டும் தோழர் விரும்பிச் சேர விரைவுடன் சேர்ப்போம்

3.கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்
பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட

4.சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்
பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர

5.தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட
ஆட்சியாவும் அவர்களின் நன்மைக்கென்றே மாறிட

6.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்
முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம்

7.சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம்
அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம்

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே Lyrics in English

1.thonndu seyyath tholarae thutippudan selvom
manndala maanidar maannpai naatith thaeduvom

2.eenndu kooti yaekamaay eththisaiyum selluvom
vaenndum tholar virumpich sera viraivudan serppom

3.katchi neengak kalvi ongak, kiraamam kalikkap
patchikkum kadan kavalai paranthae otida

4.sirumai theerach selvaakkuch suthanthiram serap
porumai seranni vakuththum aikkiyam valara

5.thaalchchiyullor vaalvataiyum tharumam ongida
aatchiyaavum avarkalin nanmaikkente maarida

6.suththa manath thooymaiyaal nam sorvai ottuvom
muththar pol suyanalanthuranthu thunnivom

7.saththiya viratham poonndu saanthamaaych selvom
aththanin arulaich saarnthum aanantham kolvom

song lyrics Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே

@songsfire
more songs Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே
Thondu Seiyya Thozharae

starLoading

Trip.com WW