
THOOYATHI THOOYAVARE | தூயாதி தூயவரே | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |

THOOYATHI THOOYAVARE | தூயாதி தூயவரே | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்
சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவினீரே
மக்களின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே
துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தந்தீரே
பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கிடம் தந்தவரே
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்
ஜீவனுள்ள நாளெல்லாம் நான் என்ன செய்ய வேண்டும்
கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்
உயிருள்ள காலம் வரை என்ன செய்ய வேண்டும்
கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்
நித்திய காலம் வரை என்ன செய்ய வேண்டும்
கர்த்தாதி கர்த்தரின் புகழ் பாட வேண்டும்
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios