Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே;
எண்ணிறைந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்.
2. பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
3. தெய்வ ஏக மைந்தனார்,
அபிஷேக நாதனார்,
‘தேவனே, என் தேவனே,
எந்தனை ஏன் கைவிட்டீர்?’
என்றுரைக்கும் வாசகம்
கேள், இருண்ட ரகசியம்.
4. துயர் திகில் இருண்டே
சூழும்போது, தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்;
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர். ஆமென்.

Scroll to Top