Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்
சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?
உள் வினையைப் போக்கத் தேடும் நான்
விடுதலை பெறல் எப்படி?
தீவினை என்னுள்ளிருப்பதால்
சிற்றின்பம் மதி மயக்குதே
தெய்வமே! உம் வல்லமையால்
அருள் புரியாயோ அப்பனே!
பல்லவி
பாலிலும் வெண்மை! வெண்மையாக்குமேன்
பாலிலும் வெண்மையாக்குமேன்
என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால்
2. இரட்சகா! கிட்டி சேரீரோ?
அடியேன் குற்றத்தைக் காட்டிட!
ஏழை என் ஜெபம் கேளீரோ?
இப்போதே என் உள்ளத்தை மாற்ற!
ஓர் போதும் மாறாத தேவனே!
என்றும் உந்தன் சக்தி குன்றாதே!
ஏழையின் ஜெபத்தைக் கேட்பீரே
நான் உணர அருள் ஈவீரே! – பாலிலும்
3. உம்மை எனக்கு காட்டுமேன்
ஒருபோதும் நான் கண்டதில்லையே
என்னில் வாசம் செய்றீர் – உம்மில்
ஐக்கியம் கொள்கிறேன் நான்
புன்முறுவல் என்னில் நிச்சயம்
உம் அன்பை அறிந்து கொண்டேனே
உம் முகத்தை காண்கிறேன் இப்போ
உம் வல்லமை என்னில் காணட்டும் – பாலிலும்

Scroll to Top