Skip to content

Um Anbai Paada Naan Vanthen – உம் அன்பை பாட நான் song lyrics

உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா
உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா (2)

நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)

நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன்
எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம் (2)

1. எனக்காக சிலுவையை சுமந்தவரே
என் பாவம் கழுவிட வந்தவரே (2)
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)
உந்தன் அன்பை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் உம்மை காணும் வரை (2)

2. ஒன்றுக்கும் உதவாமல் இருந்த என்னை
உம் சித்தம் செய்திட என்னை அழைத்தீர் (2)
நாளாக நாளாக நானில்லையே
என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)
உந்தன் கிருபை நான் என்றும் மறவேன்
இந்த ஜீவன் என்னை பிரியும் வரை (2)