Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics

உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2

ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2

பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே-2
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே -2
– ஆராதனை என்றும்

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே-2
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே-2
– ஆராதனை என்றும்

எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே-2

உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே-4
– ஆராதனை என்றும்

Scroll to Top