Vaanathae Irunthu Yesu Uthitharae – வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே

பல்லவி
வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே
கானகத்திலே சுற்றித் திரிந்தாரே
ஞானமா யுலகத்தில் போதித்தாரே
ஈனமாய் மரித்துயிர்த் தெழுந்தாரே
அனுபல்லவி
தேவ குமாரன், பாவியின் நேசன்
பாசன், ஈசன், பாவ நாசன்
சுந்தர ராஜன், அந்தர வாசன்
அந்தன், முந்தன், எந்தன் சொந்தன்
சரணங்கள்
1. வேதாளங்கள் நடுங்கி ஓடினதே
பாதாளமும் நடுங்கிக் குலுங்கிற்றே
போதகங்கள் எங்கும் கூறப்பட்டதே
நாதன் இயேசுவால் இரட்சிப்பு வந்ததே
பாவம் பிடித்தவர் சாபங்கள் போக்கி
நீக்கிப் போக்கி நல்லோராக்கி
காவலன் அழைப்புக்கு ஆயத்தமாக்கி
ஆவலோடு தன்னைத் தாழ்த்தி – வான
2. ஆத்துமத்தைச் சுத்தஞ் செய்து மீட்டாரே
காத்துக் கொள்ளும் வரம் அன்பாய் ஈந்தாரே
சாத்தான்மேல் ஜெயங்கொள்ளச் செய்தாரே
நேர்த்தியான மோட்ச பங்கைத் தந்தாரே
பாவி நீ வந்து இயேசுவைக் கேட்டால்
சாபம் நீக்கி ஆவியூற்றி
தேவனின் கோபம் மேவி வராமல்
காவல் வைத்துக் காத்துக் கொள்வார் – வான

Scroll to Top