Skip to content

Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1. செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர

2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர

3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர