Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)

1.உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (2)
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம்

2.பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (2)
என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம்

3.ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Scroll to Top