“ Walk with JESUS “ -Psalms 19:14 – Bro.Mohan C.Lazarus

சங்கீதம் 19:14  – என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
Psalms 19: 14 –  May The Words Of My Mouth And The Meditation Of My Heart Be Pleasing In Your Sight, O Lord , My Rock And My Redeemer.

தேவ சமுகம் என்பது ஏதோ ஒரு இடத்திலோ, ஏதோ ஒரு நாளிலோ அல்ல. நாம் எப்போதும் தேவ சமூகத்தில் தான் இருக்கின்றோம். நாம் எப்போதும் தேவனுடைய பார்வையின் எல்லைக்குள்ளேயே இருக்கின்றோம். தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றன. இவ்விதமான ஒரு ஆவிக்குரிய விழிப்புணர்வுடன் வாழ்வதே ஆவிக்குரிய வாழ்க்கை.
அநேகர் சபை கூடும் இடங்களிலும், ஆலயமாக எண்ணப்படும் இடங்களிலுமே தேவ சமுகம் இருக்கும் என்று நம்புவதால் தான், பிற இடங்களிலும், பிற நேரங்களிலும் ஆவிக்குரிய உணர்வின்றி இருக்கின்றனர். வியாபார சூழ்நிலைகளிலோ வேலை செய்யும் இடங்களிலோ, குடும்பச் சூழ்நிலைகளிலோ நாம் தேவ சமுகத்தைக் குறித்த உணர்வுடையவர்களாகக் காணப் பட வேண்டும்.
யோசேப்பு போத்திபாரின் வீட்டில் அடிமையாய் வேலை செய்தான். ஆயினும் அங்கே அவன் தேவன் தன்னுடன் இருக்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்தான். எனவே தான் யாரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் அவன் பாவம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொண்டான்.
நாம் எங்கு இருந்தாலும் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அங்கே தேவன் இருக்கிறார், நம்மைக் கவனிக்கின்றார் என்ற சிந்தை தான், எங்கிருந்தாலும் தேவனுக்குப் பயந்து அவருக்குப் பிரியமானதைச் செய்யும்படி நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கும்.
தேவனை விட்டு தூரமாயிருக்கிறவன், சமாதானத்திற்கும் சந்தோஷத்திற்கும் அருகில் இருக்க முடியாது.

Exit mobile version