Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம்

Deal Score0
Deal Score0
Yesu En Asthipaaram – இயேசு என் அஸ்திபாரம்

இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: சாப்பு
சரணங்கள்
1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!
2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!
3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
4. லோகம் என்னை எதிர்த்து போ’ வென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க?
5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும்பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்
6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

songsfire
      SongsFire
      Logo