Skip to content

| Yesuvin Varukai | இயேசுவின் வருகை | New Tamil Christian Song 2023| S.M.Jenlisha | Gods Kind Music|

| Yesuvin Varukai | இயேசுவின் வருகை | New Tamil Christian Song 2023| S.M.Jenlisha | Gods Kind Music|


இயேசுக்கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் . இந்தப் பாடலை வெளியிடக் கிருபை செய்த கர்த்தருக்கு கோடாக்கோடி ஸ்தோத்திரம். இந்தப் பாடல் கிறிஸ்துவின் வருகையைக் குறித்ததான பாடல் .
வேதம் சொல்கிறது , நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார் ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் . மத்தேயு 24 : 44 . நமது ஆண்டவர் சீக்கிரம் வரப்போகிறார். ஆகவே நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். இன்றைக்கு மனிதன் உலகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்போது நிலை வாழ்வைக் குறித்து மறந்து போகிறான். எதை இழந்தாலும் நித்தியத்தை இழந்தால் நம்முடைய வாழ்வின் நிலமை மிகப் பரிதாபமே. ஆகவே நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும் . கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென் .

sung & cast : S.M.Jenlisha
Camera & Shots : Prapin Edit Plus
Lyrics,Tune,Music,Audio Video editing Mixing & Mastering by
Pr.S.I.Sunil Kumar
Recorded at S.I.Studio Vellachipparai

for music works contact : 7598012616

If you enjoyed this song please like this song and give your valuable comments. share the song to others and also subscribe the channel.
GOD BLESS YOU ALL

இயேசுவின் வருகை நெருங்குதே
ஆயத்தமாகிடுவோம்
இயேசுவின் வருகை சமீபமே
விழிப்புடன் இருப்போம்

எக்காள சத்தத் தொனியுடனே
மேகங்கள் மீதே வருகின்றாரே

திருடன் வருகின்ற வேளையை வீட்டெஜமான்
அறிந்தால் ஆயத்தமாகிடுவான்
நினையாத நாழிகையில் மனுஷ குமாரன்
தூதர்களோடே வந்திடுவார்
நாம் ஆயத்தமாக இல்லையென்றால்
கைவிடப்படுவது நிச்சயமே

அழைக்கப்பட்டவர்கள் அனேகராயிருக்க
தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் சிலரே
எதை இழந்தாலும் நித்தியத்தை இழந்தால்
நம் வாழ்வின் நிலைமைப் பரிதாபமே
நாம் ஆயத்தமாக வாழ்ந்திடும் போது
கர்த்தரின் வருகயில் காணப்படுவோம்

Trip.com WW