அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae

1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்
ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்
நன்மை கிருபைகளை தொடர செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமே
என்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

Scroll to Top