அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel

அதோ வாறார் மேகத்தின் மேல்

1. அதோ வாறார் மேகத்தின் மேல்
அறையுண்டு மாண்டவர்
ஆயிர மாயிரம் தூதர்
அவரோடு தோன்றுறார்
அல்லேலூயா!
ஆள வாறார் பூமியை
2. மன்னர் பிரான் கிறிஸ்துவை
மானிடர் கண் கண்டிடும்
முன்னவரை விற்றவரும்
வன் க்ரூசிலேற்றினோரும்
அங்கலாய்த்து
மேசியாவைக் காண்பாரே
3. அன்பா லடைந்த காயங்கள்
அவர் அங்கம் மேல் காணும்
அதுவே அவர் பக்தர்க்கு
அளிக்கும் மா மகிழ்ச்சி!
ஆனந்தமாய்
அவர் தழும்பைக் காண்போம்!
4. ஆம் அனைவரும் தொழட்டும்
அண்ண லேசைப் பணிந்து
அவருக்கே இராஜியமும்
மகிமை வல்லமையும்!
அல்லேலூயா
நித்ய தேவ நீர் வாரும்!
Charles Wesley

Scroll to Top