அனுசரிக்க தேவா- Anusarikka deva

1. அனுசரிக்க தேவா
அனுதினம் போதியும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்
2. அன்புடனே சேவிப்பேன்
இன்பம் ஈயும் அதுவே
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்
3. நீர் சென்ற பாதை செல்ல
பார்த்திபா போதித்திடும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்
4. காட்டுவேன் என் நேசத்தை
சாட்சியால் இப்பாருக்கே
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்

Exit mobile version