Skip to content

அக்கினி சூழ மகிமையாக – Akkini suzha Magimaiyaha lyrics

அக்கினி சூழ மகிமையாக – Akkini suzha Magimaiyaha lyrics

அக்கினி சூழ மகிமையாக
நடுவில் இருப்பவரே
துன்பங்கள் மாற்றி தொல்லைகள்
நீக்க துணையாய் இருப்பவரே – என்றும் – 2
சீயோன் குமாரத்தியே மகிழந்து களிகூறு
கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு
கலங்காதே திகையாதே – 2
இஸ்ரவேல் நடுவில் மகிமையாக
வெற்றி சிறந்தவரே
பார்வோன் சேனையை புரட்டி தள்ளி
ஜெயம் தந்தவரே
இன்று கண்ட தீங்கை இனி
காண மாட்டோம் கர்த்தர் எந்தன் நடுவில் உண்டு.
கர்த்தர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்று துதிக்கையிலே
ஆலயம் முழுவதும் மகிமையினாலே
நிரப்பி விட்டவரே
இந்த மண்பாண்டத்துக்குள் மகிமை
பொக்கிஷமாய் அபிஷேகத்தை ஊற்றுமைய்யா
மேல் வீட்டரையில் அக்கினி நாவாக
இறங்கி வந்தவரே
சீஷர்கள் உள்ளத்தில் அரிய பெரிய
மாற்றம் செய்தவரே
எங்கள் நடுவில் நீர் இறங்கி வாருமைய்யா
அக்கினியால் நிரப்புமைய்யா