
அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar paatham lyrics

அனுதினம் அவர் பாதம் – Anuthinam Avar paatham lyrics
1. அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளமுடையோனே உண்மை சீஷன்
சீஷனாய் மாறுவேன் நான்
சீஷராய் மாற்றுவேன் நான்
என்னாலே ஒன்றுமில்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே (2)
2. சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து
சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் – சீஷனாய்
3. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜோதியாய் ஜொலிக்கும் வெளிச்சமாய்
எங்கெங்கும் செல்லினும் இயேசுவைச் சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன் – சீஷனாய்
4. ஆவியின் கனிகள் அதிகம் நிறைந்து
அவருக்கே மகிமையை அகத்தினில் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன் – சீஷனாய்