உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi

உன்னதமானவர் சன்னிதி – Unnathamanavar sannithi

பல்லவி
உன்னதமானவர் சன்னிதி மறைவில்
வந்தடைக்கலம் சரண் புகுவேன்.
சரணங்கள்
1. சத்தியம் பரிசை கேடகமாகும்
சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன்.
2. வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம்
விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார்.
3. வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி,
வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார்.
4. நீடித்த நாட்களால் திருப்தியாக்கி
நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார்.
5. பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும்
சதா காலமும் மகிமை உண்டாகும்.

Scroll to Top