Skip to content

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu

என் நெஞ்சமே கவிபாடிடு
இயேசு பிறந்தாரே
என் உள்ளமே துதி பாடிடு
இயேசு பிறந்தாரே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
பாலனாய் பிறந்தார்
1.வானதூதர் பாடினாரே
கான மேய்ப்பர் விரைந்தாரே
மாடடைக் குடிலினிலே
பாலனைக் கண்டனரே
2.இயேசு பாலன் இவ்வுலகில்
என்னை மீட்க வந்ததினால்
என் உள்ளம் தந்திடுவேன்
என்றென்றும் பாடிடுவேன்