நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike

நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு

நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி

1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;

2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி

3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்

5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி

6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Scroll to Top