நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

Faith Score0
Faith Score0

நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி

நன்றி இயேசு ராஜா (4)

1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா

2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )
மாற்றுகிறீர் நன்றி ஐயா

4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

5.ராகேலை நினைவு கூர்ந்தால்
யோசேப்பை பரிசாய் தந்தீர்
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

6. எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

https://www.youtube.com/watch?v=9VbJsxWlNjY

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo