Skip to content

Paathai Theriyatha Aattai pola song lyrics – பாதை தெரியாத ஆட்டைப் போல

Paathai Theriyatha Aattai pola song lyrics – பாதை தெரியாத ஆட்டைப் போல

பல்லவி
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து
என்னை மீட்டீரே
சரணங்கள்
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியின் அண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் – பாதை
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் – பாதை
3. ஊனினை உருக்கிட வேண்டும்
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
உம் ஆவியைத் தர வேண்டும்
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும் – பாதை