பிறந்தார் பிறந்தார் வானவர் புவி

Faith Score0
Faith Score0

பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
சரணங்கள்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார் – பிறந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய் திகழ்ந்தார் – பிறந்தார்
3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார் – பிறந்தார்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன் – பிறந்தார்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம் – பிறந்தார்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் – பிறந்தார்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo