மண்ணோரை மீட்டிடவே – Mannorai Meetidave song lyrics

மண்ணோரை மீட்டிடவே – Mannorai Meetidave  Tamil Christmas Song

மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தன் மைந்தனாயினார் (2)

1. தீர்க்கன் உறைத்த வாக்கின்படியே
மார்க்கம் திறக்க மனிதனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம்

2. மண்ணில் கொடிய இருள் நீங்க
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளிவிளங்க
மன்னர் மூவர் தேடி வந்தார்
மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம்

Trip.com WW

Scroll to Top