Vasalandai Nirkum Nesarai song lyrics – வாசலண்டை நிற்கும் நேசரை
வாசலண்டை நிற்கும் நேசரை
பாராயோ கேளாயோ
1. காடு மேடாய் ஓடும் ஆடே
நாடி தேடி வாராரே
பாடுபட்டார் பாவம் தீர்க்க
நாடும் என்றும் நாதன் பாதம்
2. உந்தன் பாவம் சுமந்தோரை
சொந்தமாய் ஏற்றிடாயோ
மிஞ்சும் உன் பாவம் நீக்கிடுவார்
தஞ்சம் அவரே தாங்கிடுவார்
3. நல்லாயன் நான் என்று சொன்னாரே
வல்லவர் இயேசு தாமே
பொல்லாத எந்தப் பாவியையும்
அல்லல் வராமல் தாங்கிடுவார்
4. உள்ளே வாரும் எந்தன் இயேசுவே
தள்ளாமல் ஏற்றுக் கொள்வேன்
உள்ளம் யாவும் தூய்மையாக்கி
பிள்ளையாய்ப் பாவி என்னை ஏற்பீர்