Skip to content

Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம்

Kutti Kutti Thootharellaam Christmas song lyrics – குட்டிக் குட்டித் தூதரெல்லாம்

குட்டிக் குட்டித் தூதரெல்லாம் பட்டி தொட்டி தேடிச் சென்று
பாடினர் புதுப் பாட்டு
நட்சத்திரக் கூட்டத்துல வால் மொளச்ச ஒன்னு வந்து
ஞானியர்க்குக் காட்டும் ரூட்டு
மண் குடிசை மாளிகை ஆகின்றது
மண்ணில் ஒரு விண் பூவும் பூக்கின்றது
இம்மானுவேலாக எந்நாளும் நம்மோடு நம் தெய்வம் ஒன்றானது !
இந்நாளும் எந்நாளும் அன்போடுக் கொண்டாட நம் வாழ்வு நன்றானது !

1.உலகம் அழகு …. உறவுகள் அழகு …
குடும்பம் அழகு …. குழந்தைகள் அழகு … இந்த
உண்மையை மனதில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யும் விழா- பல
நன்மைகளை நம் இல்லங்களில் பொழிந்திடும் திருவிழா

2.தனியொரு மகனை…. தரணிக்குத் தந்து
இனிமைச் சேர்த்தது …. இறைவன் அன்பு – அந்தப்
பாசம் பரிவை பாரில் எங்கும் பரப்பிடும் ஓர் விழா – நல்
நேசம் நெகிழ்வை நெஞ்சங்களில் நிரப்பிடும் திருவிழா