Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

Faith Score0
Faith Score0

1.மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே
வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே

2. தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென்
தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்.

3.திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே
தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே.

4.சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே
சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே

5.சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்
சொன்னீர் படப் பறந்தொடி என்தேகம் வெண்மை நிறையும்.

6.நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே
குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே.

7.உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து
உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து.

8.அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம்
அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்.

9.ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும்
ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்.

10.அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக் களை யாற்றி
அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி.

11.மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு
மனுவேல் யேசுநாமம் உன்னில் மகிமைப்பட வேண்டு.

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி Lyrics in English

1.maasatta theyvaattukkutti manuvael maesiyaavae
vaarum enaip paarum pavantheeru maesaiyaavae

2. theerum vakai kaannaathintha jeka meethalain thayarnthen
thaevaa vinaitheer vaa ventun thiruppaathaththaith thuyarnthaen.

3.thiruppaatha men kathiyae pavath thiralo perumalaiyae
theeyaenudal sirasum athaich sumakkap pelanilaiyae.

4.sumanthon ingaெ vaa vaa vai un sumaiyai en thol maelae
suka aaruthal tharuvaenentu sonneer manuvaelae

5.sonneer aiyaa raththaamparach sivappaam pavak karaiyum
sonneer padap paranthoti enthaekam vennmai niraiyum.

6.niraivaa karakkadalae marai nirai yaakamaththidalae
kuraiyaa varamthayai pooranam kutikonndathun nudalae.

7.udalae thiruvirunthu suvaami uthiram thirumarunthu
ulakaasaiyaith thuranthu enathulamae athai arunthu.

8.arunthap pavachchumai Nnovidar aaraaththuyar saapam
akalum avar pathach sevaiyaal aarun thaeva kopam.

9.aarum mananthaerum avararutkann enmael saarum
aathmaa karaiyaera avar anpai rusi paarum.

10.anpaal enaiththaluvi entan aathmak kalai yaatti
avar maarpinil annaiththaar aelaiyatiyaen mananthaetti.

11.manamo yaesu saantham anpu manaththaalmaiyaip poonndu
manuvael yaesunaamam unnil makimaippada vaenndu.

song lyrics Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

@songsfire
more songs Maasattra Deiva Aattukutti – மாசற்ற தெய்வாட்டுக்குட்டி
Maasattra Deiva Aattukutti

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo