Skip to content

சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2

வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2