Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics

Faith Score0
Faith Score0

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்

அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை – ராஜ்ய
மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்
நஷ்டப் பட்டதில்லை

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்து விட்டார்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo