Skip to content

En Araikullae nan amaithiyai song lyrics – என் அறைக்குள்ளே நான் அமைதியாய்

En Araikullae nan amaithiyai song lyrics – என் அறைக்குள்ளே நான் அமைதியாய்

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்
ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?
எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்
என்னை அறிந்து எரிக்கின்றதே
இந்தக் காயங்கள் வலிக்கின்றதே

உள்ளுக்குள்னே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…
இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யா
நான் கெஞ்சிக் கேட்கிறேன்
தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ…

என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதே
இதைத் தாங்கவே முடியவில்லை
உடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியே
எனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும்

உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்
என் வாழ்வின் தருவீர் என்று
உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்
என் வாழ்வின் தருவீர் என்று

காயங்களைக் கட்டுவதில் வல்லவர் நீரே
ஐயா உம் கையைப்ப் பிடிக்கின்றேன்
எதிர்பாரா வலிகள் என் வாழ்விலே வந்தாலும்
நான் ஒன்றை நினைக்கின்றேன் …ஓ
எதிர்பாரா அதிசயங்கள் என் வாழ்வில்
நீர் கொடுப்பீர் (செய்வீர்) என்று…ஓ