Skip to content

Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்

Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்

166 : இயேசு நாதா! இயேசு நாதா!
பல்லவி
இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்!
நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன்
1. பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனே
போவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே
2. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பி
தீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன்
3. பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்கு
நாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு
4. நானுமது நீரெனது நல்ல மீட்பரே!
வானுலக மேகிட நான் வழிகாட்டுவீரோ!