பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் – Boomiyin Maanthareer koodivaareer
பல்லவி
1. பூமியின் மாந்தரீர் கூடிவாரீர்
பூரித்தே பேரின்பமாய்ப் பாடி வாரீர்
தேமிசைப் பாமலர் சூடிடுவீர்
தேவனின் திருமுன்னே நாடிடுவீர்
2. நம்மையிங் காக்கியோன் ஓரிறையாம்
நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம்
மெய்மையின் மேய்ச்சலின் செம்மறிநாம்
மேவிநம் ஆயனை நாமறிவோம்
3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே
வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே
நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே
நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே
4. ஆண்டவன் நன்மையின் மயமாவான்
ஆரருள் மாறாத நயமாவான்
ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய்
ஆண்டென்றும் தாங்கிடும் அருள் நிறைவாய்