Paathiram Nirambi Vazhikintrathe lyrics – பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பல்லவி
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடலும் நாவில் எழுகின்றதே
பாடுவேன் என்றும் இயேசுவையே
பாகமும் பங்கும் எனக்கவரே
சரணங்கள்
1. பலத்தின் மேலே பலனடைந்தேன்
பரத்தின் ஆவி வரமதனால்
பள்ளம் மேடுகள் பலவரினும்
பாடுகள் பட்டிட நான் தயங்கேன்
2. அருளின் மேலே அருளடைந்தேன்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
அகலா முள் தான் இருந்திடினும்
அருளேபோதும் என்றிடுவேன்
3. மகிமை மேலே மகிமையுண்டே
மாண்பு மேலும் மேலுமுண்டே
மண்ணில் வாழும் வாழ்வதிலே
மகிமை கண்டேன் முன் சுவையாய்