Aachitha Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

Aachitha Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

1. ஆசித்த பக்தர்க்கு
சந்தோஷமானதாம்
இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்கு
கனம் புகழ் எல்லாம்.
2. ஸ்திரீயின் வித்தானவர்
ஓர் கன்னி கர்ப்பத்தில்
பிறப்பார் என்று உத்தமர்
கண்டார் முன்னுரையில்.
3. விஸ்வாச பக்தியாய்
மா சாந்த மரியாள்
அருளின் வார்த்தை தாழ்மையாய்
பணிந்து நம்பினாள்
4. “தெய்வீக மாட்சிமை
உன்மேல் நிழலிடும்”
என்னும் வாக்கேற்ற அம்மாதை
போல் நாமும் பணிவோம்.
5. மெய் அவதாரமாம்
நம் மீட்பர் பிறப்பால்
தாயானாள் பாக்கியவதியாம்
காபிரியேல் வாக்கால்.
6. சீர் கன்னி மைந்தனே,
இயேசுவே, தேவரீர்
பிதா நல்லாவியோடுமே
புகழ்ச்சி பெறுவீர்.

Scroll to Top