Aadharavae Song Lyrics
Aadharavae Song Lyrics in Tamil and English Sung By. Lucas Sekar.
Aadharavae Christian Song Lyrics in Tamil
ஆதரவே அடைக்கலமே
புகலிடம் என் உறைவிடம் (2)
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் (2)
1. நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா (2)
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள் (2)
நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே (2)
2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கின நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே (2)
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே (2)
தோள் மீது சுமந்து சென்றீரே (2)
3. நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா (2)
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் (2)
கிருபையாய் உயர்த்தினீரையா (2)
Christians songs lyrics
#songsfire