
Aah Nalla Sobanam song lyrics – ஆ நல்ல சோபனம்

Aah Nalla Sobanam song lyrics – ஆ நல்ல சோபனம்
1. ஆ நல்ல சோபனம்
அன்பாக இயேசுவும்
ஆசீர்வதித்து மகிழும்
கானாக் கலியாணம்
2. நேசர் தாமே பக்கம்
நின்றாசீர்வதிக்கும்
மணவாளன் மணமகள்
மா பாக்கியராவார்
3. அன்றுமைக் காணவும்
ஆறு ஜாடித் தண்ணீர்
அற்புத ரசமாகவும்
ஆண்டவா நீர் செய்தீர்
4. நீரே எங்கள் நேசம்
நித்திய ஜீவன் தாரும்
என்றும் தங்கும் மெய் பாக்கியம்
இன்றே ஈய வாரும்
5. ஏதேன் மணமக்கள்
ஏற்ற ஆசீர்வாதம்
இயேசு இவர் பக்கம் நின்று
ஊற்றும் இவர் மீது
6. என்றும் காத்தருளும்
ஒன்றாய் இணைத்தோனே
என்றும் சிலுவையாசனம்
முன் கெஞ்சி நிற்கிறோம்