Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

1. ஆறுதலின் மகனாம்
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை, வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே
2. தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோசம் கொண்டனன்
வார்த்தை கேட்ட நேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்
3. பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்தீர் தூய ஆவியை
4. கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்

Scroll to Top