Skip to content

Aaviyalithidum Aathiparanae – ஆவியளித்திடும் ஆதிபரனே

Aaviyalithidum Aathiparanae – ஆவியளித்திடும் ஆதிபரனே

பல்லவி
ஆவியளித்திடும் ஆதிபரனே – ஏழை
ஆத்துமம் பெலன் பெற!
அனுபல்லவி
பாவி எந்தனைப் பண்பாய்ப் பார்த்திரங்கையா!
மாய வலையிற் பட்டு மயங்காதிருக்க மெய்யாய்
சரணங்கள்
1. ஞான போதனைக் கிரு செவிகளைச் சாய்க்க
ஈன போதனைக் கண்டு வெருண்டுமே விலக்க
வானவா! வரப்பிரசாதமே யளிக்க
ஈசனே உன் சித்தம் ஏழைமேலே சிறக்க – ஆவி
2. சத்திய வேதத்தை நித்தமும் தியானிக்க
சன்மார்க்க பாதையை சார்ந்துமே வசிக்க
பக்தி வழி நோக்கிப் பாரினிலே நடக்க
சித்த மிரங்கி எந்தன் சீர்கேட்டை நீக்கித் தேவா – ஆவி
3. வாயின் தாறுமாறதை பேயின் குண மென்று
நாவு அடங்கா தொரு நாச நெருப்பா மென்று
சாவுக் கேதுவான தோர் சாப விஷமதென்று
காவல் காத்துமே நாளும் கதிபெற்றிடவே நன்று! – ஆவி
4. இருதயத்தைக் காவல் காப்பதுவே சக்தி!
இடறுவ தில்லாது ஒழுகுவதே பக்தி!
உருவாக்கு மிவையுடன் உம்பரா எனில் சுத்தி!
திருமுடனதை யெடுத் தோதிடத் தாரும் புத்தி – ஆவி