Skip to content

Aayaththama Nee? – ஆயத்தமா நீ?

Aayaththama Nee? – ஆயத்தமா நீ?

ஆயத்தமா நீ? ஆயத்தமா நீ? கர்த்தரின் வேலை செய்ய ஆயத்தமா நீ? (2)
ஆயத்தமா நீ? ஆயத்தமா நீ? ஆத்துமாக்களை சம்பாதிக்க!

  1. உடைந்து போன உள்ளங்கள் தேற்றிட வேண்டும்
    உற்சாக ஆவிதனை பெற்றிட வேண்டும்
  2. கள்ளனையும் சந்தித்து மீட்க வேண்டுமே
    கற்புள்ள கன்னிகையாய் மாற்றிட வேண்டும்
  3. காணாமல் போன ஆட்டை தேடியே
    கண்ணுறங்காமல் அலையும் நேசருக்காக
  4. பாவ சேற்றிலே வாழும் மனிதர்கள்
    பரிசுத்தம் பெற்று பரலோகம் சென்றிட
  5. கடைசி காலம் இது என்று நீ அறியாயோ?
    கர்த்தரின் வருகையும் சமீபமாகுதே