
ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு – Aazhamaam Pirathistai Seithu Kondu

ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு – Aazhamaam Pirathistai Seithu Kondu
1.ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு
தோழராம் இயேசுவில் சார்ந்து கொண்டு
பாழான லோகத்தை தள்ளிவிட்டு
வாழவே செல்கிறேன் மோட்ச வீட்டில்
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவை தானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
- ஈலோக (இவ்வுலக) இன்பங்கள் ஒன்றும் வேண்டாம்
மேலோக இன்பமே என் வாஞ்சையாம்
ஈலோகில் (உலகத்தில் ) என் காலம் பறந்திடுமே
மேலோகில் பொற்காலம் வாழ்ந்திடவே - பாவங்கள் யாதொன்றும் செய்யாமல்
பரிசுத்ததமாய் எந்தன் பாதை செல்வேன்
கறைகள் என் ஆத்மாவில் ஒட்டவிடேன்
குறைகளை ஒழித்தேகி பின்னால் செல்வேன் - மூடரின் நெஞ்சில் எழும்பும் கோபம்
ஏழை என் நெஞ்சில் எழும்பாமலே
மூடனைப் போலவே கோபம் கொள்ளேன்
நாடுவேன் இயேசுவின் சாந்தமதை - கொள்ளேனே பொறாமை யான் ஒருவர் மேலும்
நிறைப்பேன் என் உள்ளத்தை அன்பினாலே
விரும்புவேன் பிறர் வாழ்வைச் சந்தோஷமாய்
இயேசு என் நேசரின் மகிமைக்காக - ஒருபோதும் முறையிடேன் ஒன்றைக் கொண்டும்
இருப்பேன் என் வாயைத்தான் மூடிக்கொண்டு
ஜீவிப்பேன் எப்போதும் யோக்கியனாக
ஆவியில் கபடங்கள் சற்றும் இன்றி - பொல்லாத அவயவம் நாவைக்கட்டி
யாரையும் குறைவாகப் பேசமாலே
எவ்விதப் பொய்யையும் பேசாமலே
மனதார உண்மையைப் பேசிடவே - விரோதங்கள் மனதிலும் கொள்ளாமலே
தீமையைச் சகிப்பேன் திருவருளால்
சகோதரர் என்னதான் செய்திட்டாலும்
உள்ளத்தில் அவர்களை நேசிக்கவே - உத்தமர் இயேசு ஜீவித்தார் போல்
அத்தனே ஜீவிக்க வாஞ்சிக்கிறேன்
கர்த்தனே கருணை செய் கிருபை கூர்ந்து
ஸ்தோத்திரம் பாடுவேன் இன்றும் என்றும்
Aazhamaam Pirathistai Seithu Kondu song lyrics in english
1.Aazhamaam Pirathistai Seithu Kondu
Thozharaam Yesuvil Saarnthu Kondu
Paazha Logaththai Thallivittu
Vaazhavae Selkirean Motcha veettil
Pirathesistaiyai Naan Puthupikkirean
Kiristhesuvil Thinam Jeevikkavae
Pirathesistaiyi Aalam Siluvai Thanae
Yesuvai Pin selluvean
2.Ivvulga( Eeloga) Inbanagal ontrum Vendam
Meloga Inbamae En vaanjaiyaam
Eelogil ( Ulagaththil) En kaalam Paranthidumae
Mealogil Porkaalam Vaalnthidavae
3.Paavangal Yathentrum Seiyamal
Parisuthamaai Enthan Paathai selvean
Karaigal En Aathumavil Ottavidean
Kuraikalai Olitheagi Pinnaal Selvean
4.Moodarin Nenjil Elumbum Koba
Yealai En Nenjil Elumbamalae
Moodanai polavae Kobam Kollean
Naaduvean Yesuvin Saanthamathai
5.Kollaenae Poramai yaan Oruvar mealum
Niraippean Un Ullaththai Anbinlae
Virumbuvean Pirar Vaalvai santhosamaai
Yesu En nesarin Magimaikkaga
6.Orupothum Muraiyidean Ontrai kondum
Iruppean En vaayaithaan moodikondu
Jeevippean eppothum Yokkiyanaga
Aaviyil Kabadangal Sattrum Intri
7.Pollatha Avayam Naavaikatti
Yaaraiyum Kuraivaga Pesamalae
Evvitha Poiyaiyum Pesamalae
Manathaara Unmaiyai pesidavae
8.Virothangal Manathilum Kollamalae
theemaiyai sagippean Thiruvarulaal
Sagotharar Ennathaan seithittaalum
ullaththil Avarkalai Nesikkavae
9.Uththamar Yesu Jeeviththaar Poal
Aththanae Jeevikka Vaanjikkirean
Karthanae Karunai Sei Kirubai Koornthu
Sthoththram paaduvean Intrum Entrum