அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane


பல்லவி
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே

சரணங்கள்
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே — ஆ

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே — ஆ

5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே — ஆ

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai nane

Scroll to Top