Akkarai Ulla Deivam song lyrics – அக்கறையுள்ள தெய்வம்
அக்கறையுள்ள தெய்வம்
நீர் தானே – என்மேல் 2
என் தாயை விட
என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட !
என் தாயை விட
என் தந்தையை விட
என்னை நேசிக்கும்
யாரையும் விட!!
மோசேயைக் கூடைக்குள்ளே
பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா!
தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா!
யோனாவை மீனுக்குள்ளே
காக்கவில்லையா!! – 2
எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை
காக்க இயேசு வல்லவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே
சாரிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா !! 2
மறுதலித்த பேதுரு மனங்கசந்து
அழுத போது மீட்டது உம் அக்கறை அல்லவா!
சபையை உடைத்த பவுலையும் சந்திக்கவில்லையா!
கடைசி நேரம் கள்வனையும் மீட்கவில்லையா!!