Skip to content

Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர்

Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர்

அழகானவர் அருமையானவர்
இனிமையானவர் (2)
மகிமையானவர் மீட்பரானவர் (2)
அவர் இயேசு இயேசு இயேசு

1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் (2)
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் (2)
என்னுடையவர் என் ஆத்தும நேசரே

2. கன்மலையும் கோட்டையும் துணையுமானார்
ஆற்றி தேற்ற காத்திடும் தாயுமானவர் (2)
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா (2)
என்னுடையவர் என் நேச கர்த்தரே

3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் (2)
பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா (2)
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்