
Ana B’Ko’ach A Kabbalistic Prayer – Hebrew Worship Songs
Ana B’koach – Tamil Version
Ana B’koach உமது வலது கரத்தின் வலிமையுடனும், மகத்துவத்துடனும்
நாங்கள் உம்மை மன்றாடுகிறோம். விதியின்
கட்டுக்களிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
மகிமையானவரே…..உம்முடைய மக்களாகிய எங்களின் துதி
பாடல்களை ஏற்று, எங்களை பரிசுத்தப்படுத்தி உயர்த்தும்.
பராக்கிரமமானவரே… உம்மை பின்பற்றுபவர்களை கண்ணின்
மணிபோல காத்தருளும்.
எங்கள்மேல் மனமிரங்கி, எங்களை ஆசீர்வதித்து
பரிசுத்தப்படுத்தும். என்றென்றும் உம்முடைய நீதியே
எங்களுடைய பலனாயிருக்கட்டும்.
வல்லமையும் பரிசுத்தமுமானவரே…. உம்முடைய
நன்மைகளினால் உம்முடைய மந்தையை நடத்தும்.
மகத்துவமும் மகிமையுமானவரே …. உம்முடைய
பரிசுத்தத்தை நினைவுகூரும் உம்முடைய மக்களை
நினைத்தருளும்.
இரகசியங்கள் எல்லாம் அறிந்தவரே….. எங்கள்
மனக்கதறல்களை கேட்டு, எங்கள் கண்ணீரை
ஏற்றுக்கொள்ளும்.
உம்முடைய உன்னத ராஜ்யத்தின் திருப்பெயர் சதாகாலமும்
ஆசீர்வதிக்கப்படுவதாக!!!!!!