Skip to content

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள்

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள்

அப்பா சொன்ன வாக்குகள்
எல்லாம் நிறைவேறுமே-3

பொய் சொல்ல மனுஷனல்லவே
மனம் மாற மனுஷனுமல்ல
அவர் உனக்கு சொன்ன வாக்கு
எனக்குச் சொன்ன வாக்கு
நம்ம சபைக்குச் சொன்ன வாக்கு
எல்லாமே நிறைவேற போகுது-2-அப்பா

1.சின்னவன் ஆயிரமாய் மாறப்போகிறான்
சிறியவன் பலத்த ஜாதி ஆகப்போகிறான்-2
தீவிரமாய் அதை செய்து முடிக்கப்போகிறார்
அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது
மகிழப்போகுது மகிழப்போகுது-2-அப்பா

2.சாம்பலெல்லாம் சிங்காரமாய் மாறப்போகுது
உன் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது-2
பாலைவனம் சோலைவனமாய் மாறப்போகுது
நீ வடிச்ச கண்ணீரெல்லாம் மாறப்போகுது
மாறப்போகுது எல்லாமே மாறப்போகுது-2-அப்பா

3.வெண்கல கதவு எல்லாம் உடைய போகுது
இரும்பு தாழ்ப்பாளும் முறிய போகுது-2
பொக்கிஷமும் புதையலும் தான் திறக்க போகுது
அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது
மகிழப்போகுது மகிழப்போகுது-2-அப்பா

Appa Sonna Vaakugal lyrics songs, Appa Sonna Vaakugal song lyrics, Appa Sonna Vaakugal song lyrics- அப்பா சொன்ன வாக்குகள்,Pastor Lucasekar