Skip to content

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய், நாடுவாய்
விரும்பாதே பேர் பிரஸ்தாபம்
லோக மகிமை பிரதாபம்
ஆத்ம வாழ்வின் நித்திய லாபம்
நாடுவாய், நாடுவாய்
நாடுவாய், தெய்வாசிர்வாதம்
கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்
பாவம் தீரத் திருப்பாதம்
நாடுவாய், நாடுவாய்,
மீட்பர் போல் சுத்தாங்கமாக
தாழ்மையோடு சாந்தமாக
தொண்டு செய்ய ஆவலாக
நாடுவாய், நாடுவாய்,
பிறர் இயேசுவண்ட சேர
அவராலே கடைத்தேற
தெய்வ சித்தம் நிறைவேற
நாடுவாய், நாடுவாய்,
அருள் நாதர் அரசாளும்
காலம் வந்து, சர்வத்ராளும்
மீட்பைக் காணவும், எந்நாளும்
நாடுவாய், நாடுவாய்,