அருணோதயம் ஜெபிக்கிறேன்
பல்லவி
அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள் பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே
சரணங்கள்
1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம்
2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம்
3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே
ஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவே
பாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம்
4. செய்யும் வேலை யாவுக்குமென் மா கிருபை வேணுமே
இல்லாவிடில் நான் வெறுமையே – என் இயேசுவே
எல்லாம் உம்மால் கூடும் உண்மையே – அருணோதயம்
5. வருகைக்கேற்ற ஆயத்தமும் மறுபிறப்பின் ஆவியும்
மனமிரங்கித் தாருமேசையா – என் இயேசுவே
தினமுமென்னைக் காருமேசையா – அருணோதயம்
6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் – என் தேவனே
அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன் – அருணோதயம்
அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள்பரனே கேளுமே
ஆவிவரந்தாருமே – என் யேசுவே
1. கருணையுடன் கடந்தராவில்
காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் யேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்
2. இந்தநாளைக் காணச் செய்தீர்
இரக்கமுள்ள தெய்வமே
இதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் – என் யேசுவே
இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்
3. கதிரவன் எழும்பிவரும்
முறையின்படியே என்மேல்
கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் யேசுவே
நித்தம் நித்தம் பிரகாசித்திடும்
4. பகலில் வரும் மோசமொன்றும்
தமியன்மேல் விழாமலே
பாதுகாக்க வேணும் தெய்வமே – என் யேசுவே
சூதுவாது போக்கும் தெய்வமே
- లేఖనం నెరవేర్పుకై | Redu Nedu Janiyinchinadu | Latest NEW Telugu Christmas Song
- Jivitam Silicone Replacement Bands Compatible with Fitbit Versa/Versa 2 / Versa Lite, & For boAt Xtend smartwatch Adjustable Classic Accessory Wristband Fitness Straps for Women Men
- PEMPONDHINCHU I Dr. A.R.Stevenson
- Sri yesu manakoraku janminchinadu | Telugu Christmas dance children 2024 | Jesus christmas dance2024
- WRAPTURE. Premium DSLR Camera Scratchproof Protective Skin for Nikon Z6 ii – No Residue Removal, Bubble Free, Scratch Resistant, Stretchable, HD Quality Printed – HDCS 014
அருணோதயம் ஜெபிக்கிறேன் – arunoothayam jebikkiren